Friday, January 31, 2014

கந்தர் அநுபூதி


காப்பு

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்

(1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

(2) உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

(3) வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

(4) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

(5) மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

(6) திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

(7) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

(8) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.

(9) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

(10) கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

(11) கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

(12) செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

(13) முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

(14) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

(15) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

(16) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

(17) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

(18) உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

(19) வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

(20) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

(21) கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.

(22) காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.

(23) அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

(24) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

(25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

(26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

(27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

(28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

(29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

(30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

(31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

(32) கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

(33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

(34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.

(35) விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

(36) நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.

(37) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

(38) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

(39) மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.

(40) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.

(41) சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.

(42) குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

(43) தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

(44) சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.

(45) கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.

(46) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

(47) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

(48) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

(49) தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

(50) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

(51) உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே

-------------------------------------------------------------------------------------------

 kAppu - VinAyagar vAzhththu

nenjak kanakallu negizhn dhurugath
thanjaththaruL shaNmuganuk kiyalsEr
senchoR punaimAlai siRandhidavE
panjak karavAnai padham paNivAm.   ( kAppu ) 

      nUl

Aadum parivEl aNisEval enap
pAdum paNiyE paNiyAi aruLvAi
thEdum kayamA muganaich cheruvil
sAdum thaniyAnai sagOdharanE.   (1) 

ullAsa nirAgula yOga vidhach
challAba vinOdhanum nee yalaiyO
ellAmaRa ennai izhandha nalam
sollAi murugA surabhU pathiyE.   (2) 

vAnO punal pAr kanal mArudhamO
nyAnO dhayamO navilnAn maRaiyO
yAnO manamO yenaiyANda idam
thAnO poruLAvadhu shaNmuganE.   (3) 

vaLaipatta kaim mAdhodu makkaLenum
thaLaipat tazhiyath thagumO thagumO
kiLaipat tezhusUr uramum giriyum
thoLaipat turuvath thodu vElavanE.   (4) 

magamAyai kaLaindhida vallapirAn
mugamARu mozhindhu mozhindhilanE
agamAdai madandhaiyar endRayarum
jegamAyaiyuL nindRu thayanguvadhE.   (5) 

thiNiyAna manOsilaimeedhu unathAL
aNiyAr aruvindham arumbhumadhO
paNiyA vena vaLLi padham paNiyum
thaNiyA vadhimOga dhayAparanE.   (6) 

keduvAi mananE gadhikEL karavA
thiduvAi vadivEl iRaithAL ninaivAi
suduvAi neduvEdhanai thUL padavE
viduvAi viduvAi vinai yAvaiyumE.   (7) 

amarum padhikEL agamAm enumip
pimarangkeda meipporuL pEsiyavA
kumaran girirAsa kumAri magan
samaram poru dhAnava nAsaganE.   (8) 

mattUrkuzhal manggaiyar maiyal valaip
pattUsal padum parisendRozhivEn
thattUdaRa vEl sayilath theRiyum
nittUra nirAgula nirppayanE.   (9) 

kArmAmisai kAlan varil kalabath
thErmAmisai vandhedhirap paduvAi
thArmArba valAri thalAri enum
sUrmA madiyath thodu vElavanE.   (10) 

kUgA enaen kiLaikUdi azhap
pOgAvagai meipporuL pEsiyavA
nAgAsala vElva nAlukavith
thyAgA suralOga sigAmaNiyE.   (11) 

semmAn magaLaith thirudum thirudan
pemmAn murugan piRavAn iRavAn
summA iru sollaRa endRalumE
ammA poruL ondRum aRindhilanE.   (12) 

murugan thanivEl muninam guruvendRu
aruLkoNdu aRiyAr aRiyum tharamO
uruvandRu aruvandRu uLadhandRu iladhandRu
iruLandRu oLiyandRu enanindRa dhuvE.   (13) 

kaivAi kathirvEl murugan kazhalpetRu
uivAi mananE ozhivAi ozhivAi
meivAi vizhinAsi yodum seviyAm
aivAi vazhi sellum avAvinaiyE.   (14) 

murugan kumaran guhanendRu mozhindhu
urugum seyalthandhu uNarvendRu aruLvAi
poru punggavarum puviyum paravum
gurupunggava eNguna panjaranE.   (15) 

pErAsai enum piNiyil piNipattu
OrA vinaiyEn uzhalath thagumO
veerA mudhusUr padavEl eRiyum
sUrA suralOga thurandharanE.   (16) 

yAmOdhiya kalviyum emmaRivum
thAmEpeRa vElavar thandhadhanAl
pUmEl mayalpOi aRameip puNarveer
nAmEl nadaveer nadaveer iniyE.   (17) 

udhiyA mariyA uNarA maRavA
vidhimAl aRiyA vimalan pudhalvA
adhigA anagA abhayA amarA
padhi kAvala sUra bhayangaranE.   (18) 

vadivum dhanamum manamum guNamum
kudiyum kulamum kudi pOgiyavA
adiyandham ilA ayilvEl arasE
midi endRoru pAvi veLippadinE.   (19) 

aridhAgiya meipporuLukku adiyEn
uridhA upadEsam uNarthiyavA
viridhAraNa vikrama vELimaiyOr
purithAraga nAga purandharanE.   (20) 

karudhA maRavA neRikANa enakku
iruthAL vanasanthara endRu isaivAi
varadhA murugA mayil vAgananE
viradhA surasUra vipAdaNanE.   (21) 

kALaik kumarEsan enak karudhi
thALaip paNiyath dhavam yeidhiyavA
pALaikkuzhal vaLLi padham paNiyum
vELai surabhUpadhi mEruvaiye.   (22) 

adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn
mudiyak kedavO muRaiyO muRaiyO
vadivikkrama vEl magipA kuRamin
kodiyaip puNarum guNa bhUdharanE.   (23) 

kUrvElvizhi manggaiyar konggaiyilEe
sErvEn aruL sEravum eNNumadhO
sUrvErodu kundRu thoLaiththa nedum
pOrvEla purandhara bhUpadhiye.   (24) 

meiyEyena vevvinai vAzhvai ugandhu
aiyyO adiyEn alayath thagumO
kaiyO ayilO kazhalO muzhudhum
seiyOy mayilERiya sEvaganE.   (25) 

AadhAramilEn aruLaip peRavE
needhAn orusattRum ninaindhilaiyE
vEdhAgama gnAna vinOdhamanO
theethA suralOga sigAmaNiyE.   (26) 

minnEnigar vAzhvai virumbiya yAn
EnnEvidhiyin payaningu idhuvO
ponnEmaNiyE poruLE aruLE
mannEmayilERiya vAnavanE.   (27) 

AanA amudhE ayilvEl arasE
gnAnAkaranE navilath thagumO
yAnAgiya ennai vizhungi veRum
thAnAi nilai nindRadhu thaRparamE.   (28) 

yillE enum mAyaiyil ittanai nee
pollEn aRiyAmai poRuththilaiyE
mallEpuri panniru vAguvil en
sollE punaiyum sudar vElavanE.   (29) 

sevvA-nuruvil thigazh vElavan andRu
ovvAdhadhena uNarviththa dhuthAn
avvARu aRivAr aRigindRadhu alAl
evvARu oruvaRkku isaivippadhuvE.   (30) 

pAzhvAzhvu enum ippadu mAyaiyilE
veezhvAi ena ennai vidhiththanaiyE
thAzhvAnavai seidhanathAm uLavO
vAzhvAi ininee mayilvAgananE.   (31) 

kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu
alaiyE padumARu adhuvAi vidavO
kolaiyEpuri vEdarkulap pidithOi
malaiyE malaikURidu vAgaiyanE.   (32) 

sinthAkula illodu selvamenum
vinthAdavi endRu vidappeRuvEn
mandhAkini thandha varOdhyanE
kandhA murugA karunAgaranE.   (33) 

singgAra madandhaiyar theeneRi pOi
manggAmal enakku varam tharuvAi
sankrAma sighAvala shaNmuganE
ganggAnadhi bAla krupAgaranE.   (34) 

vidhikANum udambai vidA vinaiyEn
gadhikAna malarkkazhal endRu aruLvAi
madhivAnudhaL vaLLiyai alladhupin
thudhiyA viradhA surabhUpadhiyE.   (35) 

nAthA kumarA namaendRu aranAr
OdhAi ena Odhiyadhu epporuLthAn
vEdhAmudhal viNNavar sUdumalar
pAdhA kuRamin padhasEgaranE.   (36) 

girivAi vidu vikrama vEl iRaiyOn
parivAram enum padham mEvalaiyE
purivAi mananE poRaiyAm aRivAl
arivAi adiyOdum agandhaiyaiyE.   (37) 

AadhALiyai ondRu aRiyEnai aRath
theedhALiyai AaNdadhu seppumathO
kUdhALa kirAtha kulikku iRaivA
vEdhALa gaNam pugazh vElavanE.   (38) 

mAvEzh sananam keda mAyaividA
mUvEdanai endRu mudindhidumO
kOvE kuRamin kOdithOL puNarum
dhEvE sivasankara dhEsiganE.   (39) 

vinaiyOda vidum kathirvEl maRavEn
manaiyOdu thiyanggi mayanggidavO
sunaiyOdu aruvith thuRaiyOdu pasum
thinaiyOdu ithaNOdu thirindhavanE.   (40) 

sAgA dhenaiyE saraNanggaLilE
kAkA namanAr kalagam seyunAl
vAgA murugA mayil vAgananE
yOgA sivagnAna ubadhEsiganE.   (41) 

kuRiyaik kuRiyAthu kuRithhu aRiyum
neRiyaith thani vElai nigazhth thidalum
seRivattRu ulagOdu uRaisindhaiyum attRu
aRivattRu aRiyAmaiyum attRadhuvE.   (42) 

thUsA maNiyum thugilum punaivAL
nesA murugA ninadhu anbaruLAl
AasA nigaLam thugaLAyina pin
pEsA anubhUdhi piRandhadhuvE.   (43) 

sAdum thanivEl murugan saraNam
sUdumpadi thandhadhu sollumadhO
veedum surarmAmudi vEdhamum vem
kAdum punamum kamazhum kazhalE.   (44) 

karavAgiya kalviyuLAr kadai sendRu
iravAvagai meipporuL eeguvaiyO
kuravA kumarA kulisAyudha kun
jaravA sivayOga dhayAparanE.   (45) 

enthAyum enakkaruL thandhaiyum nee
sinthAkula mAnavai theerthenai AaL
kandhA kadhir vElavanE umaiyAL
maindhA kumarA maRainAyaganE.   (46) 

AaR AaRaiyum neeththu adhanmEl nilaiyaip
pERA adiyEn peRumARu uLadhO
seeRAvarusUr sidhaiviththu imaiyOr
kUrA ulagam kuLirviththavanE.   (47) 

aRivondRaRa nindRu aRivAr aRivil
piRivondRaRa nindRa pirAn alaiyO
seRivondRaRa vandhu iruLE sidhaiya
veRi vendRavarOdu uRum vElavanE.   (48) 

thannanthani nindRadhu thAn aRiya
innam oruvarkku isaivippadhuvO
minnum kadhir - vEl vigirthA ninaivAr
kinnam kaLaiyum krubaisUzh sudarE.   (49) 

madhikettu aRavAdi mayanggi aRak
gadhikettu avamE kedavO kadavEn
nadhipuththira gnAnasugAdhibavath
thidhi puththirar veeRadu sEvaganE.   (50) 

uruvAi aruvAi uLadhAi iladhAi
maruvAi malarAi maNiyAi oLiyAi
karuvAi uyirAi gathiyAi vidhiyAi
guruvAi varuvAi aruLvAi guganE.    (51) 

      vAzhththu 

AaRiru thadanthoL vAzhga
AaRumugam vAzhga veRppai
kUru sei thanivEl vAzhga
kukkudam vAzhga sevvEL
yERiya manjai vAzhga
Aanai than aNanggu vAzhga
mARila vaLLi vAzhga
vAzhga seer adiyAr yellAm.    (52) 

...... end ......



**Many thanks to www.murugan.org for the tamil lyrics.
***Many thanks to www.kaumaram.com for the English lyrics.
****Song recording by "Thirupugazh Mamani" Late Sri. T.K.Subramanian and his thirupugazh sabai members.